எனது அழைப்பை ஏற்று இணையத்தின் வழி சங்கமித்த நண்பர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறைந்தது, ஜூலை 21ல்தான் நாம் முதன் முதலில் சந்தித்தோம் என்பதை பலராலும் நினைவு கூற முடிந்தது.
சற்று முன்பு எனக்கு Garantor ஆக இருந்தவர் என்னை அழைத்துப் பேசினார். ஏறக் குறைய நாம் அனைவரும் நமது கல்லூரி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களை மறந்திருப்போம். பலருக்கு அது ஒரு அற்பமான காரியமாகத்தான் தோன்றும். ஆனால், நமது வாழ்க்கை ஓட்டத்தில் அடுத்த மைக்கல்லைத் தாண்டுவதற்கு அவர்கள் முக்கியமானவர்கள் என்பதை மறக்கலாகாது. இந்நேரத்தில் எனக்குக் கையொப்பமிட்ட திரு.பெரியசாமி அவர்களுக்கும் திருமதி சோதிநாயகி அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்களும் உங்கள் உத்திரவாதிகளை நினைவுகூர்ந்து நன்றி கூறலாமே.
இன்னும் ஒரு விஷயம்....
உங்கள் கல்வி கேள்விகளுக்குத் தேவையான பல பாடப் பொருள்களைப் பின்வரும் வலைப்பூக்களில் பதிவேற்றம் செய்திருக்கிறேன். உங்களுக்குப் பயனான காரியம் அங்கு காணப்பட்டால், தாராளமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
கல்வி வங்கி
- தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான பாடப் பொருள்கள்.
GADING GURU
- இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான பாடப் பொருள்கள்.
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியலை மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் என்ற வலைப் பூவில் காணலாம். இது எக்சல் வடிவில் மாவட்டம் வாரியகப் பட்டியலிப்பட்டிருக்கிறது.
Wednesday, July 21, 2010
Tuesday, July 20, 2010
திருமதி ஞானமணியின் செய்தி
Forwarded Message: glad to meet again
how are u. i'm mrs Nyanamany A/P Seeni , your coursemate in MPLP year 1986/88. hope you can still remember me. i was very glad when i saw your advertisement in Makkal Oasai about the gathering among MPLP student 1986.mrs murugajothi also called me and inform me about it. now i'm working in smk tasek damai, ipoh as a full time counselor, married and have 3 kids,daughter form 4 and 2 boys (form 2 & standard 4).my husband is also a full time counselor in smk methodist (acs), ipoh. hearby i attach my family foto. Currently i am doing my PhD (psikologi pendidikan) with my husband in UPSI.send my regards to all our friends.
Monday, July 12, 2010
ஜூலை 21, 2010ல் இணையம் வழி சங்கமிக்கிறோம்
லெம்பா பாந்தாய் ஆசிரியர் கல்லூரியில்
1986ம் ஆண்டில் நுழைந்த ஆசிரியர்களுக்கு
ஒரு முக்கிய அறிவிப்பு
வரும் 21 ஜூலை 2010ம் ஆண்டில், லெம்பா பாந்தாய் 1986ம் ஆண்டு இந்திய பயிற்சியாசிரியர்கள் தங்கள் நட்பின் 24ம் நிறைவு நாளைக் கொண்டாடவுள்ளனர். இந்த நிறைவு நாளைக் கொண்டாடுவதற்கு வரலாற்றுப்பூர்வமான சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த முறை அவர்கள் இணையம் வழி உறவாடவுள்ளனர். இந்த ஏற்பாடுகளை ரவாங் இடைநிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் திரு.வி.பி.ஜான்சன் ஏற்பாடு செய்து வருகிறார்.
அவர் தமதறிக்கையில் பின்வருமாறு எழுதியுள்ளார்.
இந்நவீன காலத்தில் தொலைத் தொடர்பு கேந்திர வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இணையத்தின் மூலம் உறவாடுவதன் மூலம் நம்முடைய நேரமும், பணமும், அலைச்சலும் பெருமளவில் மிச்சப்படும். நம்முடைய தினசரி வேலைகளை விட்டுவிட்டு ஒரு கூரையின் கீழ் கூட வேண்டியதில்லை. பெட்ரோலுக்கும், டோலுக்கும் பணத்தைக் கட்டி, பல போக்குவரத்து அபாயங்களைக் கடந்து வரவேண்டியதில்லை.
இன்று எல்லோருடைய கையிலும் கணினியும் கைப்பேசியும் உள்ளன. நவீன கைப்பேசியில் குழு உரையாடல் நடத்தலாம். Video Call மூலம் நேரில் பேசுவதுபோல் உரையாடிக் கொள்ளலாம்.
இதே காரியத்தைக் கணினியின் மூலமும் செய்யலாம். யாகூவில் தங்கள் கணக்கைப் பதிவு செய்து கொண்டிருந்தால், நாம் இணையத்தில உலா வரும்போது, நமது நண்பர்கள் யார் இணையத் தொடுப்பில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களோடு அரட்டையைத் தொடங்கலாம். இடது புறத்தில் உள்ள பெட்டியில் Chat & Mobile Text என்ற தலைப்பு காணப்படும். அதில் காணப்படும் தேர்வுகளில் Available என்ற தேர்வைச் சொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் யார் யார் தொடுப்பில் இருக்கிறார்கள் என்பதைக் காண முடியும். இப்போது உங்கள் நண்பர்களோடு உரையாடலாம். உங்கள் கணினியில் வெப்கெம் இருந்தால், முகமுகமாகப் பேசுவதற்கு வாய்ப்பு கிட்டும்.
இந்த நாளில் நண்பர்கள் சந்திப்பதற்கு மூன்றாவது தேர்வும் இருக்கிறது. அதாவது வட்டார அளவில் ஒன்று கூடி தங்கள் ஐக்கியத்தை வளர்த்துக் கொள்வதும் ஒரு வழிவகை ஆகும். இதனை அந்த வட்டாரத்தில் உள்ள ஓர் ஆசிரியர் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஆசிரியர் தம் வட்டாரத்தில் வாழும் நண்பர்களை ஒரு உணவகத்திலோ இல்லத்திலோ ஒன்றுகூட ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டு குடும்பங்கள் சந்தித்துக் கொண்டால் கூட அது ஒரு பெரிய காரியமாகும். அந்த நேரத்தில் உங்கள் மடிக் கணினியைக் கொண்டு வந்தால்கூட இன்னொரு ஊரில் சந்திப்பை நடத்துகிறவர்களோடு உரையாடும் வாய்ப்பு ஏற்பாடும்.
இந்த நண்பர்கள் குழுமத்திற்கு www.mplpin86.blogspot.com என்ற வலைப்பூவில் இயங்குகிறது. ஜூலை 21ல் நாம் அனைவரும் அந்த வலைப்பூவில் வலம் வரலாம். நமது சந்திப்புக்குப் பிறகு நடந்த முக்கியமான சம்பவங்களின் புகைப்படங்களை ஸ்கேன் செய்து இந்த வலைப்பூவில் பதிவேற்றம் செய்யலாம். அப்படி முடியவில்லை என்றால் rawangjohnson@yahoo.com என்ற எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.
நமக்குக் கற்றுக் கொடுத்த விரிவிரையாளர்களையும் நாம் மறக்கலாகாது. திரு.நாராயணசாமி, திரு.ஏகாம்பரம், திரு.நாகப்பன், திரு.மன்னர் மன்னன், திரு.ஆறுமுகம், திரு.இந்திரன் ஆகியோர் மிக முக்கியமான விரிவுரையாளர்கள் ஆவர். இவர்களோடு தொடர்பு இருந்தால், நமது இல்லங்களுக்கு அழைத்து விருந்துபசரித்து அவர்களைக் கௌரவிக்கலாம்.
எனவே, இப்போதே, நமது சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். இந்த சந்திப்பு குறித்து ஏதோவது ஆலோசனை வேண்டுமென்றால் 012-3095142 என்ற தொலைபேசி எண்ணோடு என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Subscribe to:
Comments (Atom)