Monday, July 2, 2012

26வது ஆண்டு நினைவு நாளைக் கொண்டாடுவோம்


நண்பர்களே,

மறந்து விட்டீர்களா?

21 ஜுலை 1986ல் நாம் நாள் முதன் முதலில் சந்தித்தோம்.

காலங்கள் கடந்து 26 வருடங்கள் ஆகின்றன.

நினைவுப் படுத்துவதற்கு நானிருக்கிறேன்.

இந்த நினைவுச் சுடரைப் பகிர்ந்து ெகாள்ளுங்கள்.

பிஎஸ்ஆர், பிஎஸ்ஆர் ஐ 1986ம் வகுப்பு நண்பர்கள் அனைவருக்கும் நமது ‘பிறந்த நாள்’ வாழ்த்துகளைத் ெதரிவித்துக் ெகாள்வோம்.

நமது குடும்பங்களின் வாரிசுகளில் யார் முதலில் திருமணம் செய்து ெகாள்வார்?

யார் பட்டதாரியாக வர்ப போகிறார்?

யார் மருத்துவராகப் போகிறார்?

உங்களில் யாராவது முதலாவது தாத்தா அல்லது பாட்டி என்ற பதவியைப் பெறப் போகிறீர்களா?

எல்லா சந்தோஷமான காரியங்களையும் நான் எண்ணிப் பார்க்கிறேன். நீங்களும் எண்ணிப் பாருங்களேன்!

உங்களுக்காக நான் கட்டி வைத்த வலை மனை இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை அது உங்கள் மீது கொண்டுள்ள அன்பின் நிமித்தம் கட்டி வைத்த தாஜ்மஷால். http://www.mplpin86.blogspot.com/ என்ற முகவரியைக் கொண்டுள்ளது. உலக அதிசயத்தில் ஒன்றாக இல்லாமல் போகலாம். ஆனால் உங்கள் அன்புக்காக நான் சேர்த்து வைக்கற பொக்கீஷம். உங்களிடம் இருக்கிற கல்லுாரி புகைப்படங்களையும் அனுப்பி வைத்தால் பதிவேற்றம் செய்கிறேன்.

நாம் விரும்பாத அழைப்பும் வந்து விடலாம்! மரணம் ௯ட நம்மை அழைக்கலாம். நாம் சந்தித்த இடைப்பட்ட காலத்தில் சொல்லாமல் ெகாள்ளாமல் சென்று விட்டிருக்கலாம். அல்லது விடை பெறுவதற்கு நேரம் ௯ட கிடைக்காமல் போகலாம்.

எனக்கு அந்தக் கவலை வந்து விட்டது. எனவே உறுக்கமாக எழுதுகிறேன். 

சடுதியில் மரணம் வந்து விட்டால் குடும்பத்தாரை விட  அதிகமாக நான் கவலைப் படுவேன். லெம்பா பாந்தாய் நண்பர்களின் நட்பு எனது உள்ளத்தில் பிரித்தெடுக்க முடியாத அச்சாரம்.

எனவே நண்பர்களே,

எனக்காக இந்த மின்னஞ்சலை உங்கள் ெலம்பா பந்தாய் நண்பர்களுக்கு பார்வெர்ட் ெசய்யுங்கள். 
உங்கள் கணவர் மனைவிக்குக் ௯ட. ஏனென்றால் இன்று கணவர் மனைவியாக பிணைந்தவர்கள் அன்று மாணவர்களாகதானே வந்தோம்.

விடை பெறுகிறேன்................

அன்புடன்
ஜான்சன் விக்டர்

No comments:

Post a Comment