1986/89ம் ஆண்டுகளில், லெம்பா பாந்தாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் என்னோடு பயின்ற ஆசிரியர்களுக்கு வணக்கம்.
21.07.1986ம் ஆண்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
ஆம், அதுதான் நாம் அனைவரும் முதன் முதலாக இந்தக் கல்லூரியில் சந்தித்த தேதி.
எத்தனையோ அனுபவங்கள்....
எத்தனையோ நினைவுகள்.....
மறக்க மாட்டோம், பிரியமாட்டோம்....
என்று வாக்கு கொடுத்தோம்.
ஒரு சிலர் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளாமல் போனார்கள். வேறு சிலர் கலப் போக்கில் சொந்தப் பிரச்சனை, காதல்
பிரச்சனை, கல்யாணப் பிரச்சனை, விவாகரத்துப் பிரச்சனை,.....
என்று பிரச்சனைகளால் மூழ்கிப் போய் வாக்குறுதிகளை மறந்து போனார்கள்.
எல்லா ஆசிரியர்களையும் நமது நட்பை/ உறவை மறந்து விடக் கூடாது என்பதற்காக இந்த நாளில் ஏதாவது ஒரு முறை தொடர்பு கொண்டு வருகிறேன். ஒரு சிலரே என்னோடு தொடர்பு கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறார்கள்.
நமது தொழில் காலம் (ஓய்வு பெறும் காலம்) சுமார் 10 வருடங்கள்தாம் இருக்கின்றன. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்று பார்த்தீர்களா?
நேற்றுதான் தொழிலில் சேர்ந்ததுபோல் இருந்தது. ஆனால், அந்தத் தொழிலின் பாதி பயணத்தைக் கடந்து விட்டோம். நம்மில் பலர் இல்லர வாழ்வில் இணைந்து கால் நூற்றாண்டைக் கடந்து விட்டனர். நமது பிள்ளைகள் வாலிப பருவத்தை அடைந்து காதல் கத்தரிக்காய்களில் (நம்மைப் போலவே) இறங்கி இருப்பார்கள். எத்தனைப் பேரின் பிள்ளைகள் இல்லறத்தில் சேர்ந்து உங்களைத் தாத்தா பாட்டி ஆக்கி விட்டார்கள் என்று தெரியாது.
நானோ கல்லூரியை விட்டு வெளியாகி 10 ஆண்டுகள் கழித்துதான் திருமணம் செய்து கொண்டேன். உண்மையில் திருமணத்தைப் பற்றி நீண்ட காலமாக சிந்திக்கவில்லை. என் சிந்தனைப் போக்கே வேறு விதமாய் அமைந்தது என்பதைப் பலர் அறியாமல் இருந்திருப்பீர்கள்.
தமிழ்ப் பள்ளி - தமிழ்க் கல்வி - இதில்தான் எனது கவனம் லயித்து இருந்தது. நமது மாணவர்களுக்காக உழைக்க வேண்டும், தமிழ்ப் பள்ளி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தால் அதிகமாய் துலங்கிக் கொண்டிருந்தேன்.
பத்து ஆண்டுகள் கழித்து எனது உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தால், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டேன். தாங்கள் அரசியல் ஜாம்பவான்கள்.... தங்களை எதிர்க்கிறவர்களின் குடும்பத்தேயே பூண்டோடு அழித்து விடுவேன் என்று சமதமிட்டவர்கள் எனது அதிரடி நடவடிக்கைகளில் உரைந்து போனார்கள்.
இன்னும் எனது அனுபவங்களை எழுத நினைக்கிறேன். ஆனால், நண்பர்களுக்கு வாசிப்பதில் சலிப்பு ஏற்படும் என்று இத்தோடு நிறுத்திக் கெள்கிறேன். உங்கள் அனுபவங்களையும் அறிய விரும்புகிறேன்.
நமக்கென்று ஒரு வலைப்பூவைத் தொடக்கி வைத்திருக்கிறேன். ஃபேஸ்புக் பிரபல்யம் அடையாத காலக் கட்டம் அது. தயவு செய்து www.mplpin86.blogspot.com என்ற எனது வலைப்பூவுக்கு விஜயம் வாருங்கள். குறிப்பாக கல்லூரி நினைவுகளைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் புகைப்படங்கள் இருந்தால் ஸ்கென் செய்து அனுப்பி வையுங்கள்.
நன்றி.....
rawangjohnson@yahoo.com
No comments:
Post a Comment