Who is this? Please write something about him.
யார் இவர்? இவரைப் பற்றி ஒரு சில வரிகள் எழுதுங்கள்.
தமிழ் வகுப்பில் பெரும்பாலும் நான் இவர் பக்கத்தில்தான் அமர்ந்திருப்பேன். விரிவுரையாளர் மன்னர் மன்னர் ஓர் இடுபணி கொடுத்தார். ஒத்த ஓசைகளைக் கொண்ட சொற்களும் பொருள்களும் என்ற தலைப்பில் சொற்களைப் பட்டியலிட வேண்டும்.
நான் கடைசி வரை அந்த அடுபணியைச் செய்யவில்லை. நண்பர் மிகவும் கஷ்டப்பட்டு செய்திருந்தார். அந்தக் காலத்தில் டைப்ரைட்டர் பயன்பாடுகூட மிகவும் குறைவு. அதிலும் தமிழ் டைப்ரைட்டரைப் பலர் பார்த்ததில்லை. ஆனால் நானோ, அதில் அத்துப்பிடி.
விடுமுறை முடிந்து திரும்பி வரும் போது அவருடைய இடுபணியைப் பார்த்து காப்பி அடித்தேன். அவர் பேனாவில் எழுதியதை நான் விடிய விடிய டைப் செய்து மறுநாள் அனுப்பினேன். திரு.மன்னர் மன்னன் நண்பருக்கு 44/50 புள்ளிகள் வழங்கினார். எனக்கோ 45/50 கொடுத்தார்.
இந்த நண்பரை நான் மறக்க முடியுமா?

No comments:
Post a Comment